செய்திகள்

வித்தியா கொலை வழக்கு;18 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு மீண்டும் 18 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்காமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட 11 ஆவது சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்ற போதிலும் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் பிரகாரம் சந்தேநபர்களின் விளக்கமறியல் மீண்டும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 2 ஆம் 3 ஆம் சந்தேகநபர்கள் வித்தியாவை கடத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 6 ஆம் சந்தேநபர்களே துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.

n10