செய்திகள்

வித்தியா நினைத்திருப்பாளா….

கதிரவன் ஒளி பட்டு
காலைப்பனி அகன்ற
காலைப்பொழுது அது

வெண்முகில் கொண்டு
செய்த வெள்ளை ரோஜா
வெள்ளாடையில் வெளியே வந்தாள்
வித்தி(யா)லயத்துக்குப் போக

வீதியில் என் விதி முடியுமென்று
வித்தியா நினைத்திருப்பாளா
இல்லை விதி மீது வீண்பழி
போட்டு விடமுடியாது
வீணர்கள் விரித்த சதி வலையில்
வீழ்த்தப்பட்டவள் வித்தியா

புன்ணகையோடு புதுக்கனவுகளையும்
புத்தகப்பையையும் சுமந்து கொண்டு
புறப்பட்டவளை புறம்போக்குகள்
புதருக்குள் வைத்து குதறின

குரங்குகளின் கையில் கிடைத்த
குமரியின் உடலைப் பார்த்து
குலைநடுங்கிப் போனான் அண்ணன்
விடுமுறைக்கு வந்த விருந்தாளிக்கு
விருந்தளிக்கப்பட்ட வித்தியாவின்
நிலைகண்டு பதறாத மணமுண்டோ
உருகாத உள்ளம் உண்டோ
இந்த உலகத்தில்….

-என்.எஸ்.ரஜீவ்

N5