செய்திகள்
விபத்தில் சிக்கிய பாலிவுட் நடிகை
பாலிவுட்டின் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத். இவர் அமெரிக்காரில் கடந்த 12ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு காரில் திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளார். கார் வேகமாக சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனருக்கு தொடர்ந்து இருமல் வந்ததால் அவரால் காரை நேராக ஓட்ட முடியவில்லை.
இதனால் கார் நிலைதடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மதில் சுவரில் வேகமாக மோதியது.
இதனால் காருக்குள் இருந்த கங்கனா ரணாவத்துக்கு பலத்த அடி. நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்ட, உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
N5




