வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.
அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.(15)




