செய்திகள்
விரைவில் அமைச்சரவையில் மாற்றம்?
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள ஜனாதிபதியும் பிரதமரும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி முக்கிய அமைச்சுக்களின் விடயங்களும் மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இருவரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




