விரைவில் நடந்து வந்து நன்றி சொல்வேன்: கமல் ஹாசன்
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல்ஹாசன் தான் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் தனது ரசிகர்களுக்கு அனுப்பியுள்ள தகவலில் விரைவில் நடந்து வந்து நன்றி சொல்வேன் என உருக்கமாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தின் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே சென்னையிலுள்ள தனியார் மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசனுக்கு எலும்பு முறிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
தற்போது ஓய்வில் இருந்து வரும் கமலஹாசன் மீண்டும் எழுந்து நடப்பதற்கு பல நாட்கள் ஆகும் என பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் நடந்து வந்து ரசிகர்களின் அன்பிற்கு நன்றி சொல்வேன் என்றும் நடிகர் கமலஹாசன் வாட்ஸ் அப் மூலம் தனது ரசிகர்களுக்கு உருக்கமான தகவலை அனுப்பியுள்ளார்.
N5




