செய்திகள்

”விலைபோயுள்ளவர்களே தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோருகின்றன”

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு உள்ள ஒரேயொரு தெரிவு என்றும் அதனையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.

ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.

அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம்.

இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

-(3)