செய்திகள்

வில்பத்தை பாதுகாக்க ஜனாதிபதியினால் புதிய வர்தமானி அறிவித்தல்

வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள நான்கு ஏக்கர் பாதுகாப்பு காட்டுப் பகுதியை பாதுகாப்பு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி உமைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை ரஷ்யாவுக்கான விஜயத்தின் போது மொஸ்கோ நகரில் வைத்து கைச்சாத்திட்டுள்ளார்.
இதன் கீழ் வில்பத்து சரணாலயத்தின் வடக்கில் அமைந்துள்ள பிரதேசம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உட்பட்ட மாவில்லு, வெப்பல், கரடிகுழி, மறிச்சக்கட்டி, விலச்சிக்குளம், பெரியமுறிப்பு ஆகிய வனப் பிரதேசங்களை ஒன்றிணைத்து மாவில்லு பாதுகாப்பு வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் எல்லை மாற்றப்பட வேண்டுமாயின் வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக இதனை செய்ய முடியும். துறைசார்ந்த அமைச்சின் நடவடிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பின் பின்னேரே இடம்பெறும். -(3)