செய்திகள்

அசங்க குருசிங்கவுடன் மோதல்- இலங்கை பயிற்றுவிப்பாளர் பதவியை கைவிட்டார் கிரஹாம்போர்ட்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம்போர்ட் தனது பணியை இடைநடுவில் கைவிட்டு நாடு திரும்பியுள்ளார்
இலங்கை அணியின் முகாமையாளராக பணியாற்றும் முன்னாள் வீரர் அசங்க குருசிங்கவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்தே போர்ட் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணதொடரில் இலங்கை இந்திய அணிகளிற்கு இடையிலான போட்டிக்கு முன்னர் போர்ட் மிகவும் கடுமையான கடிதமொன்றை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பிவைத்துள்ளார்.இலங்கை அணியின் முகாமையாளர் அசங்ககுருசிங்கவுடன் தனக்கு பிரச்சினைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தான் அசங்க குருசிங்கவை நியமிக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளதால் அதனை மாற்றப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மேலும்கிரஹாம் போர்ட் அசங்ககுருசிங்கவை செவிமடுக்கவேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஓப்பந்தப்படி அவர் நான்கு வருடங்கள் பணியாற்றவேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது
இதனை தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பிய பின்னர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்ட போர்ட் தனது உடமைகளுடன் தென்னாபிரிக்க திரும்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் இதனை உறுதிசெய்துள்ளனர். அவர் மீண்டும் வரமாட்டார் என தெரிவித்துள்ள கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் அவரை தொடர்புகொள்ள முடியாமலிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.