செய்திகள்

ஆஸியின் இளைய அணியும் ஏனைய அணிகளுக்கான அவர்களது எச்சரிக்கையும்

மெல்பேர்னில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதல் மூன்று பந்துகளில் அங்கு திரண்டிருந்த இரசிகர்களுக்கு ஆஸி அணி உலக கிண்ணத்தை தனதாக்கும் என்பது புலனாகியுள்ளது.

மிட்ச்செல் ஸ்டார்க் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வேகமாகவும் துல்லியமாகவும் மக்கலத்திற்கு பந்துவீசினார்.அந்த போட்டி வரை எல்லா பந்துவீச்சாளர்களையும் கலங்கவைத்த மக்கலம் ஸ்டார்க்கினை எதிர்கொள்ளும்போது சிறு குழந்தை போல காணப்பட்டார்.

மக்கலத்தின் விக்கெட் தகர்க்கப்பட்ட விதம் நியுசிலாந்தின் கனவுகளை ஆரம்பத்திலேயே தகர்ப்பதாகவும்,ஆஸி அணியை வெற்றியை நோக்கிய பயணத்தை மூர்க்கத்தனமாக ஆரம்பிப்பதற்கு உதவுவதாகவும் அமைந்திருந்தது.அந்த சாதகமான ஆரம்பம் கைநழுவிப்போவதற்கு கிளார்க் பின்னர் ஓரு போதும் அனுமதிக்கவில்லை.

209935
இந்த உலககிண்ணப்போட்டிகள் முழுவதையும் எப்படி வென்றார்களோ அதேபான்றே அவர்கள் இறுதிப்போட்டியையும் வென்றனர்.வேகப்பந்து வீச்சு வேகமானதாகவும் துல்லியமானதாகவும் காணப்பட்டது, ஸ்டார்க் அதற்கு தலைமை தாங்கினார்,களத்தடுப்பில் அணி எப்போதும் வேகமானதாகவும்,விழிப்புணர்வு மிக்கதாகவும் காணப்பட்டது.

துடுப்பாட்டம் போதுமானதாக காணப்பட்து. அதற்கு முக்கிய காரணம் அற்புதமான ஸ்டீவன் ஸ்மித், மேலும் துடுப்பாட்ட வரிசை இறுதிவரை பலமிக்கதாகவும் விளங்கியது. அணியின் ஓவ்வொரு துடுப்பாட்ட வீரரும் ஏதோ ஓருவகையில் பங்களிப்பை செய்தனர்.

ஆஸி அணியின் சில வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வரலாம்.எனினும் ஆஸியின் வெற்றி சகாப்தம் தொடரப்போகின்றது. இந்த வெற்றி வேகப்பந்துவீச்சிலும் இளiமையிலும் கட்டமைக்கப்பட்டது என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம்.பந்துவீச்சாளர்களில் ஜோன்சன் மாத்திரமே வயது கூடியவர். 30 வயது ஜோன்சனிற்கு. ஏனைய வேகப்பந்து வீச்சாளர்கள் எவரும் 25 வயதை தாண்டாதவர்கள்.

இதனை கருத்தில் கொள்ளும்போது கிளார்க்கிற்கு பின்னர் தலைமைபொறுப்பை ஏற்பார் என கருதப்படுகின்ற ஸ்மித் தொடர்ந்தும் அணி வெற்றிகளை குவிக்ககூடிய வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருப்பார்.

ஸ்டார்க்கின் துல்லியமும் வேகமும் சில வேளைகளில் கற்பனை பண்ணமுடியாததாக காணப்படுகின்றது. அவர் மக்கலத்தை வெளியேற்றிய விதம் ஆஸி அணியின் வெற்றியை தீர்மானித்த தருணம் என கிரிக்கெட் வரலாறு முழுவதும் நினைவு கூறப்படும்.உளவியல் ரீதியாகவும்,வேகப்பந்துவீச்சின் உத்தி அடிப்படையிலும் அந்த பந்து அற்புதமானதாக காணப்பட்டது.அதுவரை பந்துவீச்சாளர்களை நடுங்கவைத்துக்கொண்டிருந்த மக்கலம் முதல் மூன்று பந்துகளுக்கும் எதனையும் செய்ய முடியாமல் விழிபிதுங்கினார்.

முதல் ஓவரில் விக்கெட் வீழ்நதது நியுசிலாந்தின் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பின்வாங்கச்செய்தது. ஆஸி பந்துவீச்சாளர்கள் அவர்களை சுற்றிவளைத்தனர்.சோர்ட் பிச் பந்துகளை அடித்தாடுவதை நியுசிலாந் துடுப்பாட்ட வீரர்கள் தவித்தனர்.

மக்ஸ்வெல்; பந்து வீச வந்த வேளை நிச்சயமற்ற மனோநிலையில் ஆடிக்கொண்டிருந்த கப்தில் சாதரணமாண பந்திற்கு ஆட்டமிழந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் அவர் அந்த பந்தை சிக்ஸர் அடித்திருப்பார்.

ஸமித்தின் பங்களிப்பு
மூன்றாவது ஆட்டக்காரர்க களமிறங்கிய ஸ்மித் ஆஸியின் பாரம்பரியத்தை பின்பற்றி அணியின் நிலைமையை ஸ்திரப்படுத்தினார்.

Australia v New Zealand - 2015 ICC Cricket World Cup: Final
ஆஸி அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் ஸ்மித் அதனை விட இந்த தொடர்முழுவதும் அணியின் முதுகெலும்பு அவர் என தெரிவிக்கலாம்.

உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பித்த வேளை ஆஸி அணி ஸ்மித்தினை 5 வீரராக களமிறக்கி அவரது திறமையை வீணடித்தது.எனினும் அவரை 3வது வீரராக களமிறக்க தொடங்கிய பின்னரே அணி தனது வெற்றிக்கான சிறந்த சூத்திரத்தை வகுத்தது.

ஆஸிஅணியின் வெற்றிக்கு காரணமான துடுப்பாட்ட வீரரும் வேகப்பந்துவீச்சாளரும் 25 வயதிற்கும் குறைவானவர்கள் என்பது புதிய ஆரம்பம் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.