செய்திகள்

இலங்கை -பங்களாதேஷ் இன்று மோதல் : முன்னோக்கி செல்லுமா இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் முதலாவது இன்று தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகும் போட்டி இரவு-பகலாக நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2019ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஒருநாள் சர்வதேச தரப்படுத்தல் பட்டியலில் ஆறாவது இடத்திலுளள் இலங்கை அணிக்கு தொடர்ந்து முன்னோக்கி பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றால் போனஸ் புள்ளிகளுடன் மொத்தப் புள்ளி 100 ஆக அதிகரிக்கும்.
பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தால் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்து மேலும் பின்னடைவை காணும்.
இன்றைய போட்டி தொடர்பாக அணியின் தலைவர் உபுல் தரங்க கருத்து தெரிவிக்கையில் . ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் புதிய வீரர்களும் அனுபவம் கொண்ட வீரர்கள் பலரும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஒருநாள் போட்டியின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியிருந்த இலங்கை அணி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்கின்றது. முதலாவது இரண்டு போட்டிகள் ரங்கிரி தபுலு விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இது துடுப்பாட்டக்காரர்களுக்கு வசதியாக இருந்த போதிலும் இரவு நேரத்தில் பந்துவீச்சாளர்கள் பெரும் நன்மை அடையக்கூடுமென அவர் தெரிவித்தார். -(3)