செய்திகள்

ஐடேஜாவின் சுழலில் சுருண்டது இங்கிலாந்து

சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திரஜடேஜாவின் அற்புதமான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து அணி சென்னை டெஸ்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.
ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்டின் ஐந்தாம் நாளான நேற்று ஜடேஜா வீழ்த்திய ஏழு விக்கெட்கள் காரணமாக இங்கிலாந்து அணி தனது இரண்;டாவது இனிங்ஸில் 207 ஓட்டங்களிற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து இதன் காரணமாக இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்களால் இந்த டெஸ்டை வென்றதுடன் தொடரை 4-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது