செய்திகள்

சுழன்றடித்த மில்லர் சூறாவளியால் தொடரை இழந்தது ஆஸ்திரேலியா

தென்னாபிரிக்க அணி சகலதுறை வீரர் டேவிட் மில்லரின் அபாரசதம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஓருநாள்போட்டியை வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
வெற்றிபெறுவதற்காக மிகவும் கடினமான 372 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மில்லரின் 118 ஓட்டங்களின் துணையுடன் நான்கு பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியை சுவைத்தது.

மில்லர் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் அடங்கலாக 118 ஓட்டங்களை பெற்று இந்த வெற்றிக்கு வித்திட்டார்.இந்த வெற்றி குறித்து தென்னாபிரிக்க அணித்தலைவர் டு பிளசிஸ் குறிப்பிட்டுள்ளதாவது.நான் இதுவரைவிளையாடிய போட்டிகளில் பெற்ற வெற்றிகளில் இதுவே சிறப்பானது,இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனேக அணிகள் தங்கள் முடியாது என நினைப்பதே வழமை,ஆனால் நாங்கள் எதிர்த்துப்போராடினோம்.

டேவிட் மில்லர் குறித்து நான் மிகவும் மகிழச்சியடைகின்றேன், பெருமிதம்கொள்கின்றேன்,டேவிட் மில்லர் அற்புதமான இனிங்ஸை விளையாடினார்,சாத்தியமில்லை என தோன்றும். விடயத்தை சாத்தியமாக்க பெரும் துணிச்சல் அவசியம், டேவிட் மில்லரிடம் அந்த துணிச்சல் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டேவிட் மில்லர் இது மிகவும் விசேடமான தருணம், தென்னாபிரிக்கா தொடரை கைப்பற்றஉதவியது சிறந்த விடயம்,தென்னாபிரிக்காவின் ஏனையதுடுப்பாட்டவீரர்களிற்கும் பாராட்டை தெரிவிக்கவேண்டும்,அணி முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளது, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்த ஓட்டஙகளை பெற்றது மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்