செய்திகள்

டிவென்டி 20 மார்ட்டின் குரோவிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,

நியுசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்ட்டின் குரோவின் மரணம் குறித்து கிரிக்கெட் உலகத்தினர் சிலர் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்துக்கள்
ஸ்டீபன் பிளெமிங்–மார்ட்டின் குரோவின் மரணம் குறித்து இன்று காலை கிடைத்த செய்தியால் கவலையடைந்துள்ளேன்.எனக்கு மேலும் பலரிற்குமான உத்வேகமாக அவர் விளங்கினார்.கிரிக்கெட் உலகின் தலைசிறந்தவர்களில் ஓருவர் அவர்.
குமார் சங்ககார-அற்புதமான துடுப்பாட்ட வீரர்,துணிவும் உறுதியான கருத்துக்களையும் கொண்ட மனிதர்,

mc
விவி எஸ் லக்ஸ்மன்-எனக்கு மிகவும் பிடித்த ஓரு துடுப்பாட் வீரரின் மரணம் குறித்து அறிந்து கவலையடைந்துள்ளேன்.சிறந்த துடுப்பாட்ட தொழில்நுட்பத்தினை கொண்டவர்,கிரிக்கெட் குறித்த சிறந்த மதிநுட்பத்தினை உடையவர்.
ஸ்கொட் ஸ்டைரிஸ்-1980களில் கிரிக்கெட்டினை பார்த்துவளர்ந்தவர்கள் என்ற வகையில் நாங்கள் அவரிற்கு பெரும் கடமைப்பட்டுள்ளோம்.
இயன் ஓ பிரையன்- டிவென்டி 20 மார்ட்டினிற்கு நன்றி தெரிவிக்கவேண்டும்,