செய்திகள்

டி-20 உலக கோப்பை: நியூசிலாந்துடன் இன்று மோதல்: இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா?

20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் சூடுபிடிக்கும்.கடந்த 8–ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் தகுதி சுற்று 13–ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றன.முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்று நாக்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.‘குரூப் 1’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளும், ‘குரூப் 2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

Indian team arrives in Nagpur

.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.‘சூப்பர் 10’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. தோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 20 ஓவர் ஆட்டத்தில் 10–ல் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.அதே நேரத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி இதுவரை 20 ஓவர் ஆட்டத்தில் வென்றது கிடையாது. 4 போட்டியில் விளையாடி தோற்று உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாடுவார்கள்