செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் என்றென்றும் உயிர்வாழும்

டெஸ்ட் கிரிக்கெட் என்றென்றும் உயிர்வாழும் என இந்திய அணியின் மூத்தவீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியா 500 என்ற  நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்தும் நீடிக்கும் என தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அனில்கும்ளே அதன் மரணம் குறித்துபேசவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்  இல்லாமல்போய்விடும் என தொடர்ந்து தெரிவித்து வந்தால் அது ஓரு நாள் சாத்தியமாகிவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட்கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் பிரபல்யப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஸ்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெஸ்ட்கிரிக்கெட்டை அதன் தற்போதைய வடிவத்தில் பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் ஆரம்பதுடுப்பாட்டவீரர் விரேந்திரசெவாக் பகலிரவு டெஸ்ட்கள் தேவையில்லை எக குறிப்பிட்டுள்ளார்.