செய்திகள்

பிரன்டன் மக்கலமே 2014 இன் தலைசிறந்த இனிங்சை விளையாடினார்

வெலிங்டனில் இந்தியாவிற்கு எதிராக பிரன்டன்மக்கலம் பெற்ற 302 ஓட்டங்களே கடந்த வருடத்தின் மிகச்சிறந்த டெஸ்ட் இனிங்சாக கிரிக்கின்போவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. நியுசிலாந்து அணி டெஸ்ட் போட்டியை தோற்க்கும் தருவாயில் இருந்த வேளை மக்கலம் ஆடிய ஆட்டத்திற்காகவே அந்த இனிங்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

கிரிக்கின்போவின் எட்டாவது வருட விருதுகள். அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை சிறந்த பந்துவீச்சாக அவுஸ்திரேலிய வீரர் மிட்ச்சல் ஜோன்சனின் தென்னாபிரிக்காவிற்கு எதிரான ஏழுவிக்கெட்களை வீழ்த்தியதை கிரிக்கின்போ தெரிவு செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் ரோகித சர்மா பெற்ற 264 ஓட்டங்கள் மிகச்சிறந்த ஒரு நாள் இனிங்சாகவும்,ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானிற்கு எதிராக லசித்மலிங்க பெற்ற 5 விக்கட்களை மிகச்சிறந்த ஓரு நாள் பந்துவீச்சாகவும் கிரிக்கின்போ தெரிவுசெய்துள்ளது. ரிக்கி பொண்டிங் ,இயன்சப்பல்,மார்ட்டின் குரோ, மைக்கல்ஹோல்டிங், உட்பட கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பலர் இணைந்து இந்த விருதுகளுக்கான நபர்களை தெரிவுசெய்துள்ளனர்.

இருபதிற்கு இருபது போட்டிகளுக்கான சிறந்த இனிங்சாக இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹெய்ல்ஸ் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற 116 ஓட்டங்களும், சிறந்த பந்துவீச்சாக இலங்கை அணியின் ரங்கன ஹெரத் நியுசிலாந்திற்கு எதிராக பெற்ற 5 விக்கெட்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2014 விருதுகளிற்காக பரிசீலிக்கப்பட்டவர்களில் அனேகமாக இலங்கை வீரர்களே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடத்திற்கான சிறந்த துடுப்பாட்ட வீரர்,சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்,தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர் ஆகிய விருதுகளுக்கு இலங்கை அணித்தலைவர் மத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.