செய்திகள்

மூன்றாவது டெஸ்டையும் வெல்லுங்கள்- சனத்

ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது டெஸ்டிலும் தோற்கடிக்குமாறு இலங்கை அணிக்கு தெரிவுக்குழுவின் தலைவர் சனத்ஜெயசூர்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு டெஸ்ட்களையும் கைப்பற்றி தொடரை கைப்பற்றியுள்ள இலங்கை மூன்றாவது டெஸ்டையும் வெல்லவேண்டும் என அரவிந்தா டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே சனத்தும் இந்த வேண்டுகோளைவிடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா போன்று தரவரிசையில் முன்னணியில் உள்ள அணியை மூன்றுடெஸ்ட்களிலும் தோற்கடிப்பதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் புதியசாதனையை உருவாக்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.