செய்திகள்

வீதிவிபத்தில் சிவில் பாதுகாப்புத்திணைக்கள முன்பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியில் நேற்று பிற்பகல் (15-02-2016) இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்புத்திணைக்களத்தின் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியின் 12ம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள சிவில்பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு விட்டு இரு முன்பள்ளி ஆசிரியர்களும் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் புதுக்குடியிருப்பு இருந்த கிளிநொச்சி நோக்கி வேகமாக வந்த கப்ரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிழந்;தள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின்போது ஆனந்தநகர் திருமகள் முன்பள்ளியில் கல்வி கற்பிக்கும் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆசிரியையான சிவபாலன் கஸ்தூரி (வயது 25) இலக்கம் – 222, ஆனந்தநகர், கிளிநொச்சி என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளதுடன் புதுமுறிப்பு கிளிநொச்சி சிறிகாந்தா முன்பள்ளி ஆசிரியையான எஸ்.உசாந்தினி (வயது 37)  என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் சம்பந்தப்பட்ட கப்ரக வாகனம் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில்  இராணுவத்தால் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
n10