செய்திகள்

வீரகெட்டியவில் பொலிஸார் மீது அசிட் தாக்குதல்

வீரகெட்டிய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரை கைது செய்வதற்காக அவரின் வீட்டுக்கு சென்ற வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிஸார்  அவரின் வீட்டுக்கு சென்ற போது அவரின் மகனும் அவரும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். இவ்வேளையில் அவரின் மனைவி பொலிஸார் மீது அசிட் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10