வீரவன்சவுக்கு எதிரான ஜே.வி.பியின் வழக்கு மார்ச்சில் விசாரணைக்கு
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)யினால் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்சவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட ”நெத்த வெனுவட எத்த” என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள நூலில் ஜே.வி.பியின் அரசியல் குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் அந்தக் கட்சியினால் அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் ஆராயப்பட்டபோது அதனை மார்ச் மாதத்தில் விசாரணைக்கு உட்படுத்துவதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மார்ச் மாதம் 10 மற்றும் 15ஆம் திகதிகளில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. -(3)




