வீரவன்ச தலைமையில் உதயமான ‘மேலவைஇலங்கை கூட்டணி’
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமான இயங்கும் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்பட்டது.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் நடைபெற்ற முதலாவது பொது மாநாட்டில் புதிய கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் என்பன பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமது கூட்டணியின் பெயரை “மேலவை இலங்கை கூட்டணி” என பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
இதன்போது “மேலவைஇலங்கை கூட்டணி”யின் செயற்குழு அறிவிக்கப்பட்டதுடன், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மேலவை இலங்கை கூட்டணியின் தலைவராகவும், செயலாளராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி. வீரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலவை இலங்கை கூட்டணியின் தேசிய அமைப்பாளராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் மேலவை இலங்கை கூட்டணி”யின் பிரதித் தலைவர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-(3)




