செய்திகள்

வெடிபொருட்கள் மீட்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் அவதானத்துடன் : பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் வெடிபொருட்கள் மீட்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக அவதானத்துடனேயே இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அண்மையில் சாவக்கச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் விவகாரம் தொடர்பாகஅரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது  ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெடி பொருட்கள் வடக்கு கிழக்கில் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கையெடுக்கின்றனர். எவ்வாறாயினும் அவ்வாறாக வெடிபொருட்கள் மீட்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் அவதானத்துடனேயே செயற்பட்டு வருகின்றனர்.இதேவேளை  ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பாக தினமும் கைதுகள் இடம்பெறுகின்றன. இது வழமையானது. இதன பெரிய விடமாக கருதமுடியாது. என அவர் தெரிவித்துள்ளார்.
n10