வெப்பம் காவு கொண்ட பூமியில் அதிகரித்த பூகோள வெப்பமும் காலநிலை மாற்றமும் ஏற்படுத்தும் உஸ்ணப் பாதிப்பு
மருத்துவர் சி.யமுனாநந்தா
இலங்கையில் வறட்சியான காலநிலையில் ஏற்படும் பாதிப்புக்கள் தற்போது மிகையாக அதிகரித்துக் காணப்படுகின்றது. சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுக்கும் போது அதிக வெப்பம் ஏற்படுவது வழமை. ஆனால் தற்போது பூகோள வெப்பமாதல் அதிகரித்தமையாலும் அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் அதிக வறட்சி, சூழல் வெப்பம் அதிகரித்தல் என்பன மக்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இவற்றில் சுவாச நோய்கள்இ தோல் நோய்கள்இ நீரிழப்பால் எற்படும் மயக்கம் என்பன குறிப்பிடத்தக்கவை.
வெப்பத்தினால் சுழலில் அதிக தூசிகள் காற்றில் சேரும் போது அஸ்மா தொண்டை அழற்சி தும்மல் என்பன ஏற்படலாம் சூரிய ஒளியின் தாக்கத்தால் சரும அலர்ச்சி ஏற்படலாம். தோலினை சொறியும் போது தோற்புண்கள் எற்படலாம். போதிய அளவு நீரினை அருந்தாவிடில் நீரிழப்பால் மயக்கம் ஏற்படலாம். இது பொதுவாக முதியவர்களில் ஏற்படலாம்.
அடுத்து அதிக வெயிலில் கடுமையான வேலைஇ உடற்பயிற்சி என்பனவற்றினை செய்யும் போது தசைபிடிப்பு மயக்கம் என்பன ஏற்படலாம்.
உலக சுகாதார நிறுவனம் இலங்கையில் வெப்பம் காரணமாக ஏற்படும் மரணங்களை 2015 ஆண்டில் ஆராய்ந்து 2030ம் ஆண்டளவில் 1990 ஆண்டில் வெப்பம் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களைவிட ஜந்து மடங்காக அதிகரிக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காற்று மாசுபடல் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்த வெப்பம் காரணமாக பெருகும் ஒட்டுண்ணிகள் நுண்ணுயிர்களின் தாக்கம் என்பன இக் கணிப்பீட்டில் அன்று கருத்தில் கொள்ளப்பட முடியாத நவீன இயற்கைப் பாதகங்கள் ஆகும். எனவே வெப்பம் காரணமாக மனிதருக்கு ஏற்படும் அசௌகரிய நிலைகள் எதிர்பார்த்ததை விட இன்னமும் அதிகம்.
அதிக சூழல் வெப்பம் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிப்பு வியர்த்தல் உடலில் நீரின் அளவு குறைதல்இ இதயப்பாதிப்புஇ சிறுநீரகப் பாதிப்பு என்பன ஏற்படலமாம். சோடியம் சமநிலை உடலில் குறைவதால் தசைப்பிடிப்பு ஏற்படலாம். .அதிக வெப்பச் சூழலில் வாழும் போது மனரீதியான பாதிப்புக்கள் சினம் அதிகரிப்பு, மனச்சோர்வு, போதைப் பாவனை, என்பனவும் அதிகரிக்கும். நித்திரைக் குழப்பம், சிந்திக்கும் திறன் குறைதல், கல்வியில் நாட்டம் குறைதல் என்பனவும் ஏற்படலாம்.
நீரிழவு உயர்குருதி அமுக்கம் இதய நோய் உடையவர்களிலும் பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கும் வெப்ப தாக்கம் அதிகமாக காணப்படும். அதே போல் 5 வயதிற்கு உட்பட்டோருக்கும் அதிக நீரிழப்பு சூழல் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும்.
கற்பிணித்தாய்மார்களும் போதிய அளவு நீராகாரங்களை எடுத்தல் வேண்டும். மேலும் மாதவிடாய் நின்ற பெண்களிற்கும் வெப்பச் சூழலில் அதிக நீராகாரம் தேவை. உடற்பருமனானவர்கள் தமது உடலின் வெப்பநிலையை சீர்நிலையில் பேணுவதற்கு சிரமப்படுவர். இவர்களும் அதிக நீராகாரங்களை எடுத்தல் வேண்டும். ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தது 2.5 லீற்றர் தொடக்கம் 3லீற்றர் நீரினைப் பருக வேண்டும்.
புகைபிடித்தல் சுவாசவீதத்தைப் பாதித்து வெப்பச் சுழலை எதிர்கொள்ளலை சிரமப்படுத்தும். மேலும் மதுபானம் அருந்துதல் அதிக அளவு பாதிப்பைத் தரும்.
வெப்பச் சூழலில் கடின வேலை செய்வோர் குறிப்பாக கட்டுமான வேலைஇ விவசாயம்இ இராணுவம் பொலிஸ் தீயணைப்பு வீரர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். குறிப்பாக 11 மணி தொடக்கம் 2 மணி வரை கடின வேலைகள் செய்யாது வெயிலில் இருந்து ஒதுங்கி இருத்தல் நல்லது.
வெப்பமான காலநிலையில் மரநிழல்கள் காற்றோட்டம் வெப்பத்தைச் தணியச் செய்யும். வீடுகளில நாம் நீராடுவதால் வெப்ப பாதிப்பை குறைக்கலாம்.
வுPட்டின் உட்புறத்தில் காற்றாடிகள் மூலம் குளிர்ச்சியினை ஏற்படுத்துதல் குளிருட்டிகளை இயக்கல் என்பனவும் வெப்பப் பாதிப்பைக் குறைக்கும்.
வீடுகளில் தளர்வான ஆடைகள் பருத்தி ஆடைகள் அணிதல் வெப்பத்தாக்கத்தினைக் குறைக்கும். வெப்பமான சூழலில் அதிக வியர்த்தலை உண்டாக்கும் செயற்பாடுகளை தவிர்த்தல் நல்லது.
வெப்பத்தால் தாகம் ஏற்படாது இருப்பதற்கு ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் 200 அட நீரினை அருந்தல் அவசியம்.
நாம் அதிகம் அருந்தக் கூடிய பாணங்களாக இளநீர் பழச்சாறுகள் தக்காளி வெள்ளரிப்பழம் மரக்கறி வகைகளும் உதவும். இனிப்பான பானங்கள் மதுபானம் கோப்பி என்பனவற்றை தவிர்த்தல் நல்லது. உப்புக்கூடிய உணவுகள் நீரிழப்பை ஏற்படுத்தும். கடினமான உணவுகள சமிபாடடைய சிரமமாக அமைவதால் அவற்றிளைனயும் தவிர்தல் வேண்டும்.
வெளிச்சத்தில் செல்லும் போது வெண்ணிறமான ஆடைகள் அணிதல் நல்லது. வெப்பப் பாதிப்பினால் தோல்களை பாதுகாக்க முழுமையான ஆடை அணிநது வெளியில் செல்வது நல்லது. சூரிய கதிரின் தாக்கம் தோல் அலர்ச்சியினை ஏற்படுத்தலாம். தோலின் நிறத்தினை கருமையாக்கி தோல் வறட்சி அடையலாம்.
அதிக சூரிய ஒளி கண்களையும் பாதிக்கலாம். இதனை தவிர்ப்பதற்கு விசேட கண்ணாடிகளை அணியலாம்.


