வெயங்கொடவில் ஆபாச பட தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கைது
ஆபாச படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த குழுவொன்று வெயங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக அந்தப் படத்தின் நடிகர் , நடிகை , ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீடொன்றில் ஆபாசப் பட ஒளிப் பதிவு இடம்பெற்றுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அந்த வீட்டை சுற்றி வளைத்த போது படத் தயாரிப்பில் ஈடுப்பட்டிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களால் இவ்வாறாக தயாரிக்கப்பட்ட மற்றுமொரு ஆபாச படத்தின் 6000 இருவட்டு பிரதிகள் விற்பனைக்காக விடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தள்ளது.
குறித்த படத்தின் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியிருந்த நிலையில் அதில் காணப்படும் இடத்தை அறிந்த நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-(3)




