வெல்லும் தமிழீழம் எல்லில் தமிழீழம்
வெல்லும் தமிழீழம் எல்லில் தமிழீழம்
சொல்லில் தமிழீழம் இல்லில் தமிழீழம்
எண்ணில் தமிழீழம் ஏழிசையில் தமிழீழம்
பண்ணில் தமிழீழம் பாண்பில் தமிழீழம்
தாயில் தமிழீழம் தாய்நாட்டில் தமிழீழம்
சேயில் தமிழீழம் சேயிழையில் தமிழீழம்
காரில் தமிழீழம் காண்பீர் தமிழீழம்
பாரில் தமிழீழம் பாரீர் தமிழீழம்
மண்ணில் தமிழீழம் மலரும் தமிழீழம்
கண்ணில் தமிழீழம் புலரும் தமிழீழம்
குன்றில் தமிழீழம் குமரியில் தமிழீழம்
அன்றில் தமிழீழம் மன்றில் தமிழீழம்
அல்லும் பணி எல்லும் துணி
எல்லும் பணி அல்லும் துணி
வெல்லும் வெல்லும் வெல்லும் – தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் – ஈழம்
ஈழம் ஈழம் ஈழம்.
யாழ். ஆனந்தன்



