செய்திகள்

வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானமே இறுதியானது: மஹிந்த சமரசிங்க

வெளிநாட்டு நீதவான்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானமே இறுதியானது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்கள் பங்களிக்க மாட்டார்கள் என்பது ஜனாதிபதியின் திட்டவட்டமான அறிவிப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நீதவான்கள் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் பங்கேற்க மாட்டார்கள் என ஜனாதிபதி திட்ட வட்டமாக அறிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு விடயம் குறித்து தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அதனை விடவும் வேறும் தரப்பினர் தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்கப்பார்கள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எந்த இடத்திலும் கூறியதாக தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
R-06