செய்திகள்

வெளிமாவட்ட மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைதொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு – நாயாறு பிரதேசத்தில் வெளிமாவட்ட மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைதொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

நாயாற்றுப்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களினால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்த கலந்துரையாடல் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாவினால் மாவட்ட செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்டது.

கூட்டம் முல்லைத்தீவு  மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறீஸ்கந்தராஜா, வைத்தியகலாநிதி சிவமோகன், காதர் மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினர்களான துரைாசா ரவிகரன், கந்தையா சிவநேசன், கமலேஸ்வரன், ஜெனோபர் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன், கடற்றொழிலாளர் சங்க சமாச பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

n10