செய்திகள்

வெள்ளை நிறம் காவி நிறமானதுக்கு மகிந்த எதிர்ப்பு

குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துவதற்கான அழைத்துச் செல்லப்படும் போது தற்போது அவர்களுக்கு அணிவிக்கப்படும் ஆடை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இது வரை காலம் வெள்ளை துணியால் மறைத்தே அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் ஆனால் தற்போது பௌத்த பிக்குகள் அணியும் காவியின் நிறத்தையொத்த ஆடையை அணிவித்து கொண்டு செல்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது பௌத்தத்தை நிந்திக்கும் வகையில் அமையும் என அவர் தெரிவித்துள்ளார். -(3)