செய்திகள்
வேட்பாளர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு உண்டா என ஆராய ஐ.தே.க தீர்மானம்
வேட்பு மனு கொடுப்பதற்கு முன்னர் யாரேனும் வேட்பாளர் போதைப் பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளனரா என ஆராய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி கட்சியின் வேட்பு மனு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், வேட்பாளர்கள் மீது போதைப்பொருள், எத்தனோல் மற்றும் வேறு சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் ஏதும் உண்டா என அபாயகர ஔடதக் கட்டுப்பாட்டு சபையின் தகவலறிக்கையைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
வேட்புமனு வழங்கியதன் பின்னர் அவ்வாறான விடயங்கள் வெளிப்பட்டால் எவ்வாறான அரசியல் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் வேட்பு மனுவை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




