செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

32‍,000 பேர் வரையான வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு வேலை பெற்றுத் தருமாறு கோரி, நேற்று முன்தினம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ​மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை இது தொடர்பில் முறைப்பாட்டை முன்வைக்கவுள்ளதாக, அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்மிக முணசிங்க குறிப்பிட்டுள்ளார்.


n10