செய்திகள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன்அலியே : கட்சி அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உத்­தி­ யோக பூர்வ செய­லாளராக ஹசன்அலியை தொடர்ந்தும் நியமிப்பதற்கு கட்சி உயர்மட்டம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியினால் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹசன் அலிக்கு ஏற்­க­னவே வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதன் பிர­காரம் தேசி­ய­ப்பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­ பு­ரி­மை­யையும் வழங்­கு­வ­தற்கும் இணக்கம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் செயலாளர் மற்றும் பொது செயலாளர் என இரண்டு பேர் இருக்க முடியாது எனவும் யார் அதிகாரமுள்ள செயலாளர் என்பதனை தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் கட்சிக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-(3)