ஶ்ரீ.ல.சு.கவின் செயற்குழு இன்று அவசரமாக கூடவுள்ளது : முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது கட்சி தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் நிலைமை , உள்ளுராட்சி சபை தேர்தல் கட்சியை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கட்சியை விமர்சிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் கட்சி உறுப்பினர்கள் தொடர்பாகவும் அங்கு தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இன்று பத்தரமுல்லை பகுதியில் அலுவலகமொன்றை திறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
R-06




