செய்திகள்
ஶ்ரீ.ல.சு.கவின் மே தின கூட்டத்திற்கு செல்வதா இல்லையா? மஹிந்த அணியினர் எதிர்வரும் நாட்களில் தீர்மானத்தை அறிவிப்பர்
காலியில் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதா இல்லையா என அந்த கட்சியை சேர்ந்த மஹிந்த அணியினர் எதிர்வரும் நாட்களில் கூடி தீர்மானமெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் தனக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து மேதினக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும் ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து இது வரை அழைப்பு விடுக்கப்படவில்லையெனவும் இதனால் தான் ஒன்றிணைந்த எதிரணியின் மேதின கூட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மஹிந்த கூறியுள்ளார்.
இதன்படி மஹிந்த அணியினர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு செல்லாது இருக்கும் வகையிலான தீர்மானத்தையே மேற்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.
n10




