ஶ்ரீ.ல.சு.க மாநாட்டுக்கு செல்வதா? இல்லையா? : மகிந்த அணி இன்று அறிவிக்கும்
எதிர்வரும் 4ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் கலந்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இன்னு மாலை கூடி தீர்மானமெடுக்கவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை இவர்கள் கூடவுள்ளதுடன் இதன்போது மாநாடு தொடர்பாக தமது இறுதி தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 43 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




