செய்திகள்

ஶ்ரீ.ல.மு.காவின் செயலாளர் யார்? : கட்சி இன்று தீர்மானிக்கும்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் யார் என்பதனை அந்தக் கட்சியின் உயர் குழு இன்று கூடி தீர்மானிக்கவுள்ளது.
இதன்படி கொழும்பு கொம்பனித்தெருவில் உள்ள கட்சியின் தலைமையகமான தாருசலாமில் கட்சியினர் கூடி இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
கட்சியின் செயலார் மற்றும் பொதுச் செயலாளர் என இருவர் இருப்பதாகவும் ஆனால் செயலாளர் என்று ஒருவரே இருக்க முடியுமெனவும் இதனால் செயலாளர் யார் என்பதனை நாளை தினத்திற்குள் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய கட்சி தலைவருக்கு அறிவித்துள்ள நிலையிலேயே இன்று அது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. -(3)