செய்திகள்

ஸ்டாலினுக்கு வடக்கில் இருந்து எச்சரிக்கை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் இலங்கையின் இறைமையிலுள்ள கச்சைத் தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக கடற்றொழில் சமூகம் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் கூறுகையில், தமிழக முதலமைச்சர் கச்சத் தீவை மீட்பேன் என அடிக்கடி கூறி வருகிறார்.

இவ்வாறு தமிழக கடற்றொழிலாளர்களை வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். த.வெ.க தலைவர் விஜய், அரசியல் இருப்புக்காக கச்சத்தீவு தொடர்பில் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னமே இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என விஜய்க்கும் சீமானுக்கும் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.