ஸ்ரீதேவியின் மகள் ஜானவி தனது 20 ஆவது பிறந்த நாளை தாய் , சகோதரியுடன் கொண்டாடினார்
இன்னமும் தனது முதல் படத்தைக்கூட பொலிவூட்டில் செய்யாதபோதிலும் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜானவி மீதுதான் ஊடகங்களின் கண்கள்.
ஜானவி நேற்று முன்தினம் தனது 20 ஆவது பிரபந்த தினத்தை தாயார் ஸ்ரீதேவி மற்றும் சகோதரி குஷி ஆகியோருடன் கொண்டாடினார். மூவரும் குப்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றபோது ஊடகங்களின் கமெராக்கள் அவர்களை கிளிக் செய்தன. மூவருமே வழமைபோல அழகாக இருந்தனர்.
ஜானவிக்கு காதலர் இருக்கின்றபோதிலும் கடந்த மாதம் காதலர் தினத்தையும் தனது தாயுடன் கொண்டாடியுள்ளார். இதனால் ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள நேரத்தில் காதலருடன் ஊர் சுற்றி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதே. இனி காதலரை பார்க்கவே கூடாது என்று ஸ்ரீதேவி தனது மகளுக்கு உத்தரவிட்டதாக முன்பு செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தான் ஜான்வி தனது தாயுடன் காதலர் தினத்தை கொண்டாடியிருந்தார்.





