ஸ்ரேயா ரீ என்ட்ரி கைகொடுக்குமா?
ரஜினி, விஜய் என டாப் ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயா இளம் நடிகைகளின் என்ட்ரியால் மார்க்கெட் இழந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ள ‘கவுதமி புத்தர சாதகர்ணி’ தமிழில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை இயக்கிய கிரிஷ் இயக்குகிறார். சரஸ்வதி புத்ரா ஞானசேகர் ஒளிப்பதிவு. பாரதி புத்ர சிரஞ்சன் இசை. ரகுநாத் வழங்க நரேந்த்ரா தயாரித்திருக்கிறார்.
நேரடி தமிழ் படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திலும் தற்போது ஸ்ரேயா நடித்து வருகிறார்.
இப்படங்களின் மூலம் இழந்த மார்க்கெட்டை மீண்டும் தக்க வைக்க போராடி வருகிறார் ஸ்ரேயா. சமீபகாலமாக ஹீரோயின்கள் விரும்பி நடிக்கும் ராணி கதாபாத்திரம் கவுதமி புத்தர சாதகர்ணி படத்தில் ஏற்றிருக்கிறார் ஸ்ரேயா. முக்கிய வேடத்தில் ஹேமமாலினியும் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவின் 100வது படமாக ஆந்திராவில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் தமிழிலும் வரவேற்பை பெறும் என்று பட குழு தெரிவிக்கிறது.(15)




