செய்திகள்
ஹட்டனில் பனிமூட்டம்: சாரதிகள் எச்சரிக்கை
ஹட்டன் பகுதியில், அதிக பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவுவதால், வாகனங்களைச் செலுத்தும் போது அவதானமாக இருக்குமாறு, சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொழும்பு – ஹட்டன் மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகனங்களைச் செலுத்துவோருக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் தலைமை விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களைச் செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில், அண்மைக் காலமாக மழையுடன் கூடிய காற்றும் பனிமூட்டமும் நிறைந்த வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
