செய்திகள்
ஹிக்கடுவ துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம்!
ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
-(3)




