செய்திகள்

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது

கடந்த 2015 டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பகுதியில் வைத்து, ஹிருணிகாவின் மெய்ப் பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிபென்டர் வாகனத்தில் வைத்து இளைஞரை கடத்தினர்.இதனை அடுத்து மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இளைஞரை கடத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் குறித்த தினத்தில் முறைப்பாட்டாளரின் முதலாவது சாட்சியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.(15)