ஹிலாரியின் முக்கிய ஆயுதமாக மாறியுள்ள மிச்செல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயககட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டனிற்கு ஆதரவாக ஜனாதிபதி பராக் ஓபாமா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் களமிறங்கியுள்ளனர்.
எனினும் இவர்கள் அனைவரையும் விட ஹிலாரிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் மக்களை அதிகம் ஈர்ப்பவராக அமெரிக்காவின் முதற்பெண்மணி மிச்செல் ஓபாமா காணப்படுகின்றார்.குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சிப்பவராக அவர் காணப்படுகின்றார்.
இதுவரை இணைந்து களம்காணாத ஹிலாரியும்,மிச்செலும் வியாழக்கிழமை வடகரோலினாவில் ஓன்றாக மேடைஏறுகின்றனர்.
ஆவரால் எங்களிற்காக குறிப்பிட்டளவு பிரச்சாரத்தையே மேற்கொள்ள முடியும் என நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர் மேடை ஏறிவிட்டார்,எனகிளின்டனின் பிரச்சார செயலாளர் பிரையன் பலோன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயககட்சியின் தேசிய மாநாட்டில் ஹிலாரிக்கு ஆதரவாக முதல்தடவையாக உரையாற்றிய மிச்செல் அதன் பின்னர் ஆறு தடவைகள் ஹிலாரிக்காக மேடையேறியுள்ளார்.
இம்மாத இறுதியில் ஹம்சயரில் ஆற்றிய உரையில் டிரம்பினை அவர் கடுமையாக சாடினார்,‘‘ கடந்த வாரம் டிரம்ப் பெண்களை பாலியல்ரீதியில் தாக்குவது குறித்துகருத்து தெரிவித்தார்,அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓருவர் இவ்வாறு கருத்து தெரிவிப்பார் என்பதை என்னால் நினைத்து பார்க்க முடியாது’’ என மிச்செல் கூறினார்.
மிச்செல் கலந்துகொண்ட பிரச்சார கூட்டங்கள் பெருந்திரளான மக்களை ஈர்த்துள்ளதும் உண்மை.அரிசோனாவில் அவரின் உரையை காண 7000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த கூட்டத்தில் டிரம்பின் பெயரை குறிப்பிடாமலேயே அவரை மிகக்கடுமையாக தாக்கினார் மிச்செல்.




