ஹீரோயின்களை கொச்சைப்படுத்திய சுராஜுக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா
சுராஜ் சமீபத்தில் கத்தி சண்டை படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இதில் காசு கொடுத்தால் ஹீரோயின்கள் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு எந்த நடிகையும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால், நயன்தாரா முதன் முதலாக சுராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் ‘பிங், தங்கல் என்று பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் வருகிறது, இதில் எதை சுராஜ் எடுத்துவிட்டார், கமர்ஷியல் படம் என்றாலும் ஹீரோயினுக்கு சம்மதம் என்றால் தான் கிளமராக நடிப்பார்கள். பணத்திற்காக கிளமராக நடிக்க வேண்டும் என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன்.
பி, சி செண்டர் ஆடியன்ஸ் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது முற்றிலும் தவறு’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
N5




