செய்திகள்

ஹீரோ ஜீவாவை விட தமன்னாவுக்கு அதிக சம்பளமாம்..!

நடிகை தமன்னா தமிழில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தார். சில காலங்களில் தமிழ் படங்களின் வாய்ப்புக்கள் அவரை துரத்திக்கொண்டே வந்தன. அவரை பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மிகப் பெரிய ரசிகர் கூட்டமொன்றையும் அவர் வைத்திருந்தார்.

பின்னர் அவரது பிரபலம் சற்று குறைய ஆரம்பித்தது. இப்பொழுது முன்பு போன்று தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் கிடைக்கும் படங்களில் சிறந்த முறையில் திறமையை காட்டி வருகின்றார்.

இவர் நடித்த பாகுபாலி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து ஜீவாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை மிருதன் படத்தை எடுத்திருக்கும் குளோபல் இன்போடைன்மென்ட் மைக்கல் ராயப்பன் தயாரிக்கவுள்ளார். படத்தின் ஒரு செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது என்ன என்று தெரியுமா? படத்தின் ஹீரோ ஜீவாவை விட தமன்னாவுக்கு அதிக சம்பளமாம்.

N5