செய்திகள்
ஹெரோயினுடன் சிவனொளிபாத மலைக்கு சென்றவர் சிக்கினார்
ஹெரோயின் போதைப் பொருளுடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து 100 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மீரிகமவைச் சேர்ந்த அவர், மேலும் 7 இளைஞர்களுடன் சென்ற வேளையில் மஸ்கெலிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைதாகியுள்ளார்.
இன்று அவர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். -(3)




