செய்திகள்

ஹோட்டல்களில் குறையும் உணவுப் பொருட்களின் விலைகள்!

ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எனினும், இதற்காக அத்தியாவசிய உணவு பொருட்கள், குறைவடைந்துள்ள புதிய விலையில் உணவக உரிமையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்  தெரிவித்தார்.

தேபோன்று கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் என்பவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கமைய உணவுகளின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

-(3)