செய்திகள்

ஹோமாஹமவில் அமைந்துள்ள வணிகவளாமொன்றில் மீன்வியாபாரிக்கு கொரோனா

ஹோமாஹம பிரதேச சபையின் கீழ் உள்ள வணிகவளாகத்தில் மீன்விற்பனை செய்யும் கடையொன்றின் உரிமையாளர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வணிகவளாகத்தை மூடியுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மீன்விற்பனை கடையில் பணிபுரிந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள நபர் மஹரகமவை சேர்ந்தவர் பேலியகொட மீன்சந்தைக்கு சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.(15)