செய்திகள்

10 கிலோ கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து நாட்டுக்குள் கடத்த முயற்சித்த பெண் கைது

5 கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளை உள்ளாடைக்குள் மறைத்து நாட்டுக்குள் கடத்த முயற்சித்த பெண்ணொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் டுபாயிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய குறித்த பெண்ணின் நடை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக சந்தேகத்தில் அவரை சோதனையிட்டுள்ள சுங்க அதிகாரிகள் அவரின் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 82 தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.
அவை கீழே விழாதவகையில் அவற்றுக்கு மேல் 5 உள்ளாடைகளை அணிந்திருந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.