செய்திகள்

10 நாட்களில் 12,600 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு எதிராக வழக்கு

மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் சைக்கிள்கள் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களில் 12,600 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகப்பற்ற வகையில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமை மற்றும் பயணித்தமை , தலைக்கவசம் அணியாமை , தலைக்கவசத்தின் பட்டியை இருக்கமாக அணியாமை மற்றும் வேறு பாதுகாப்பற்ற முறையில் பயணித்த செயற்பாடுகள் தொடர்பாகவே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த  6மாத காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு  இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்கில் 1300 பேர் வரையானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.